Monday, October 6, 2014

Tamil - Short Film Story - Dont Drink. You will get killed - Sugavanam 9...





9445437117, 9940058497 - Tamil - Short Film Story - Dont Drink You will get killed - Sugavanam 9176244989 - This video is about the cruelties of drinking liquor - contact: N.Sugavanam - nsugavanam@gmail.com www.sugaconsulting.in

Sunday, October 5, 2014

Tamil - Short Film Story - Week end marriage party - Sugavanam 9176244989




http://sugavanam-youtube-videos.blogspot.in/2014/10/tamil-short-film-story-week-end.html

வார இறுதி - கல்யாண விருந்து !!

வார இறுதி - கல்யாண விருந்து !! - சிறு கதை 



சுந்தர், நித்யா இருவரும் காதலர்கள். அவர்களே நமது கதையின் நாயகர்கள். அவர்களை சுற்றியே நமது கதை செல்லப் போகிறது. சுந்தரும் நித்யாவும் பேசிக்கொள்ளும் காதல் வசனங்களுடன் நமது கதை ஆரம்பமாகிறது.



"நித்யா, நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்."

"சுந்தர், நானும் உங்களை உயிருக்குயிராக காதலிக்கிறேன்."

"நித்யா, நாம் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வது?

"அதற்கு தக்க நேரம் வர வேண்டும் சுந்தர்" 

"நித்யா,  நீ உன் அப்பா அம்மாவிடம் நம் காதலை சொல்ல போகிறாயா?"

"பின்னே, சொல்ல வேண்டாமா சுந்தர். என் தம்பி வேறு காலேஜில் படித்து வருகிறான்."

"உன் தம்பி காலேஜில் படிப்பதற்கும் நம் காதலுக்கும் என்ன சம்பந்தம் ?"

"என் அப்பா ரிடையர் ஆகி விட்டார்.  சுந்தர், என் தம்பி படிப்பு முடித்து வேலைக்கு வந்தால்தான் நாம் கல்யாணம் செய்து கொள்ள முடியும்."

"நித்யா, உன் தம்பி என்ன படிக்கிறான்?"

"பி. இ.  கம்ப்யூட்டர் சயன்ஸ் மூன்றாம் வருடம், இன்னும் வேலைக்கு வர இரண்டு வருடம் ஆகும்"

"அய்யயோ, அது வரை நாம் காதலித்து கொண்டுதான் இருக்க வேண்டுமா?"

"ஆமாம் சுந்தர். அதுவரை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்."

"இதற்கு வேறு வழியே இல்லையா?"

"இல்லை"

"நித்யா, உன் கல்யாணத்திற்கு பிறகும் உன் அப்பா, அம்மாவிற்கு குடும்ப செலவிற்கு வேண்டிய பணம் கொடுத்து விடு.  நீயும் நானும்தான் சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறோமே?

"இதற்கு என் அப்பா சம்மதிக்க மாட்டார் சுந்தர்"

"ஏன்?"

"அவர் தன்மானம் இடம் கொடுக்காது"

"சரி, நம் கல்யாணத்தை எப்படி செய்ய போகிறோம்?"

"வழக்கம் போல், முகூர்த்த நாள் குறித்து, மண்டபம் பார்த்து.... அப்படித்தானே ?"

"நித்யா, நம் கல்யாணத்திற்கு எவ்வளவு செலவாகும்?"

"நாம் இப்போது 2010 இல் இருக்கிறோம். குறைந்தபட்சம் ஐந்தாறு லட்சம் செலவாகும்.  இன்னும் இரண்டு வருடம் கழித்து கல்யாணம் என்றால் வருடத்திற்கு 10 சதவிகிதம் செலவு கூட்டிக் கொள்ள வேண்டும்"

"நித்யா நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டால் இந்த செலவெல்லாம் மிச்சம்தானே?"

"ஆம் சுந்தர். மிச்சம்தான்" 

"அப்போ ஒண்ணு செய்யலாம்.  நாம ரெண்டு பேரும்  உடனே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்  கொள்ளலாம்.  மிச்சமாகும் ஆறு லட்சம் கல்யாண செலவு பணத்தை செலவு செஞ்சதா நினைசுகிட்டு, மாசம் நம்ம அப்பா அம்மாக்களுக்கு எவ்வளவு பணம் வேணுமோ அதை கொடுத்திடலாம்."

"சுந்தர், நாம வழக்கமா நம்ம நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட்டு கல்யான சாப்பாடு போடுவோம்.  ஆனா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினால் யாரையும் கல்யாணத்திற்கு கூப்பிட முடியாது.  அவங்களுக்கு எல்லாம் வருத்தமாயிடுமே."

"கவலைபடாதே நித்யா.  அதுக்கும் நான் ஒரு ஐடியா வெச்சிருக்கேன்."

"என்ன ஐடியா?"

"நித்யா, நாம் நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் நமது ரிஜிஸ்டர் மேரேஜ் பற்றி ஈமெயில் கொடுத்திடலாம்.  கல்யாணம் முடிந்த பிறகு ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஒரு சில நண்பர்களை கூப்பிட்டு மேரேஜ் பார்ட்டியாக நம் வீட்டிலேயே சமைத்து சாப்பாடு போடலாம்.  வாராவாரம் நம் வீட்டிற்கும் விருந்தினர்கள் வந்த மாதிரி இருக்கும்.  நமக்கும் சந்தோஷமாக பொழுது போகும்."

"இது நல்ல ஐடியாதான்.  ஆனால் நாம் யாரையாவது நண்பர்களை கூப்பிட்டு அவர்களில் யாராவது வர முடியாமல் போனால் என்ன செய்வது?"

"நித்யா, நாம் வாரம் நாலு நண்பர்களை கூப்பிடலாம்.  யாராவது ஒரு குடும்பம் வர முடியாவிட்டால் கூட மற்ற குடும்பங்கள் வருமில்லையா? அதே போல் நாமும் சில வாரம் சில நண்பர்கள் வீட்டிற்கு சாப்பிட செல்லலாம்.  இது அவர்களுக்கும் சந்தோஷம் கொடுக்கும்"

"ஆஹா, பிரமாதம் சுந்தர். உன் ஐடியா எல்லாம் ரொம்ப நல்லாருக்கே"

"இது மட்டுமில்லை நித்யா. நாம் கல்யாணங்களில் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் பேர்களை கூப்பிட்டு விடுகிறோம்.  யாரும் யாரையும் கவனிக்க முடிவதில்லை.  யாரும் யாருடனும் பேச முடிவதில்லை.  ஒரே மியூசிக் கச்சேரி சத்தம்.  ஆனால் நான் சொல்வது போல் வாரம் வீட்டிற்கு நாலு குடும்பங்களை கூப்பிட்டு கல்யாண விருந்து வைக்கும் போது நாம் அவர்களோடு ஆற அமர பேச முடியும். நல்ல வீட்டு சாப்பாடு சமைத்து போட இயலும். "

"அது மட்டுமில்லை சுந்தர். நாம் விருந்திற்கு கூப்பிடும் குடும்பங்களை சீக்கிரமே வந்து, நமது சமையல் மற்றும் விருந்து ஏற்பாடுகளில் அவர்களையும் உதவ சொல்லலாம் இல்லையா?

"ஆனால் இதில் எத்தனை பேர் அடுத்தவர் வீட்டிற்கு வந்து சமைக்க உதவுவார்கள் என தெரியவில்லை நித்யா.  இருந்தாலும் கேட்டு பார்க்கலாம்.  அப்படி இல்லாவிட்டால் அவர்களையே எதையாவது சமைத்து கொண்டு வர சொல்லலாம்."

"சுந்தர் அதுவும் நல்ல ஐடியாதான். நமது கல்யாண பிளான் சூப்பர்.  மண்டப செலவு கிடையாது.  நாதஸ்வர செலவு கிடையாது.  பத்திரிக்கை செலவு கிடையாது.  வீடு வீடாக கூப்பிட அலைய வேண்டாம்.  நல்ல எளிமையான ஐடியா.  எல்லாரும் இந்த மாதிரி கல்யாணம் செய்துகிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்?  கல்யாண செலவு இல்லாம அப்பா அம்மாவுக்கு உதவலாம்.  வாராவாரம் கல்யாண விருந்து என்று சொல்லி, ஒரு நாலஞ்சு வருசத்துக்கு நம்ம நண்பர்களை வீட்டுக்கு கூப்பிடலாம்.  எல்லாமே ரொம்ப நல்லாருக்கு"

இவ்வாறு பேசிக்கொண்ட நமது கதையின் நாயகர்களாகிய நித்யாவும் சுந்தரும் பேசியபடி அடுத்த வாரம்  ரிஜிஸ்டர் மேரேஜ்  செய்து கொண்டார்கள்.

இரண்டு அப்பா அம்மா கால்களிலும் மாலையும் கழுத்துமாக விழுந்து, நமஸ்கரித்து, திட்டும் ஆசிர்வாதமும் வாங்கிக் கொண்டார்கள்.  வாராவாரம் நாலு நண்பர்களுக்கு கல்யாண சாப்பாடு போடுவதில் ஒரே கூத்துதான்.  இப்போது அவர்களுக்கு கல்யாணமாகி ஐந்து வருடம் ஆகி விட்டது.  இரண்டு குழந்தைகள் வந்தாகி விட்டது.  பெரியவன் ஒன்றாம் கிளாஸ் படிக்கிறான்.  சின்னவள் ஒன்றரை வயது ஆகிறது.  ஆனால் இன்னமும் அவர்களது வார இறுதி கல்யாண விருந்து முடிந்த பாடில்லை.   அவர்களது வார இறுதி கல்யாண விருந்து சாப்பிடுவதற்கு புதுப்புது நண்பர்கள் கிடைக்கிறார்கள்.   நீங்களும் அவர்களது நண்பர்களாக மாறி,  அவர்களது "வார இறுதி கல்யாண விருந்து" சாப்பிட விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: திரு. சுகவனம் நடராஜன்.  Email:  nsugavanam@gmail.com phone: AirTel: 99400-58497  BSNL: 94454-37117

இந்த கதையின் முடிவு பொன்மொழி:

இந்தக் கதை அறிவுரை சொல்லும் ரேடியோ நாடகம் போல் இருக்கும்.  பிடிக்காவிட்டால் அடுத்த கதைக்கு சென்று தப்பித்துக் கொள்ளவும்.  இந்தப் பொன்மொழியை நான் ஏன் கதை ஆரம்பித்திலேயே சொல்லவில்லை என்றால் - எனது அருமை கதைகளை படிக்க, உங்களை விட்டால் எனக்கு வேறு யார் கிடைப்பார்கள்?



https://www.youtube.com/watch?v=6Cjnhxz8oHU



http://sugavanam-tamil-stories-jokes.blogspot.com/